சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.இந்நிலையில் நரசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நரசிங்கபுரம் சந்தை திடல் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
ஆத்தூர் ராசிபுரம் சாலையில் சேலம் விருத்தாச்சலம் ரயில் வழித்தடத்தில் ரயில்வே கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் சூழலில் நரசிங்கபுரம் சந்தை திடல் பகுதி வழியாக கனரக வாகனங்கள் சென்று வருகின்றனர்,கனமழை காரணமாக தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் சாலையில் நடந்து செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
நரசிங்கபுரம் சந்தை திடல் பகுதியில் எப்பொழுது மழை பெய்தாலும் அப்பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதாகவும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



-SXgDfGgJfO.jpg)