சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் வினோத் மற்றும் சேலம் வடக்கு தொகுதி பாமக வேட்பாளர் சதாசிவம் ஆகியோரை ஆதரித்து,பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, சேலம் சின்னக்கடை வீதி பட்டை கோவில் பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என்று மக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டனர்.சேலம் மாவட்டத்தின் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, நிர்வாகத் திறமையற்றவர்களால் மேயர் பதவி வகிக்கப்படுவதால் பல இடங்களில் அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல நகராட்சிகளில் மேயர்களுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டிருப்பது இதற்கே சான்று என்றார்.
மேலும்,அமைச்சர்களின் தனிப்பட்ட உதவியாளராக இருப்பதே மேயராக தகுதி என திமுக ஆட்சியில் பார்க்கப்படுகிறது.மோசடி நபர்களுக்கு அமைச்சர்கள் ஆதரவு அளிப்பதால், சேலம் மக்களுக்கு கோடிக்கணக்கான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார்.
சட்டம்-ஒழுங்கு குறித்தும் அவர் கவலை வெளியிட்டார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன.மக்கள் சாலையில் நடந்து செல்ல கூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை திமுக ஆட்சி உருவாக்கியுள்ளது” என்றார்.
அதேபோல் இஸ்லாமியர்களிடம் வெறுப்பை தூண்டி ஆட்சியை பிடிக்க திமுக முயற்சிக்கிறது.குடும்ப ஆட்சி மற்றும் ஊழல் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் இருக்கும் வரை கஞ்சா போன்ற போதைப்பொருட்களை ஒழிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து,இந்தி எதிர்ப்பு பெயரில் ஆங்கிலத்தையே புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவில் முதலீட்டு விவரங்கள் தெளிவாக இல்லை. பல திமுக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறினார்.
மேலும்,தலைமைச் செயலாளர், டிஜிபி மாற்றப்பட்டதுபோல், ஏப்ரல் 23 அன்று மக்கள் முதல்வரையும் மாற்ற வேண்டும் என வாக்காளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக,சேலம் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெறச் செய்து, எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க வேண்டும். நல்லவர்களுக்கு வாய்ப்பு அளிக்க மக்கள் முன்வர வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தினார்.

-uyMVg5sPR5.jpeg )
