நீட் கவுன்சிலிங் நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வின் முடிவுகளை ரத்துச் செய்யக்கோரி வழக்கறிஞர் சாய் தீபக் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று (ஜூன் 11) காலை 11.00 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீட் கவுன்சிலிங் நடத்த இடைக்காலத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீட் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்படும்; குளறுபடிகளால் நீட் தேர்வின் புனிதத்தன்மை மீது சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன், நீட் தொடர்பான வழக்குகளின் விசாரணையை வரும் ஜூலை 08- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


