சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் அனைத்து பகுதிகளிலும் பயங்கர புகைமூட்டம் எழுந்ததால் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
உடனடியாக விரைந்து தீயணைப்புத் துறையினர், துரிதமாகச் செயல்பட்டுத் தீயை அணைத்தனர். புகைமூட்டத்தை வெளியேற்ற அங்கிருந்த ஜன்னல், கண்ணாடிகளையும் அவர்கள் உடைத்தனர். கட்டிடத்தின் முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள், வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ள சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் மணி, "நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டனர். மின்வழித்தடங்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டன. மின்கசிவுக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)