ட்ரெண்டிங்

மகன் என்ற கடமையிலிருந்து தவறிவிட்டார் அன்புமணி சேலத்தில் எம் எல் ஏ,அருள் பேட்டி !!!

 

மருத்துவர் ராமதாஸின் சிகிச்சையில் தவறான தகவலை பரப்பியவர் அன்புமணி என தெரிவித்த அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் ராமதாசை அனைத்து தலைவர்களும் பார்த்து ,நலம் விசாரித்த நிலையில் அன்புமணி தொலைத்து விடுவேன் என பேசியது அவரது ஆற்றாமையை காட்டுகிறது என சேலத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் தெரிவித்துள்ளார்.


சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்,பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறும்போது,

பாமக நிறுவனரும் கட்சியின் தலைவருமான டாக்டர் ராமதாஸ் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , ஆஞ்சியோகிராம் சிகிச்சை பெற்றார்.அப்போது அவரை மருத்துவமனைக்கு வந்து பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட  அனைத்து கட்சி தலைவர்களும் மருத்துவர் ராமதாஸ் அவர்களை  சந்தித்து நலம் விசாரித்தனர்.  அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
ஆனால் அப்போலா  மருத்துவமனைக்கு வந்த அன்புமணி,மருத்துவரை மட்டும்  சந்தித்து பேசிவிட்டு ,ராமதாஸ் அவர்களை சந்திக்காமலேயே சென்றுவிட்டார். 
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராமதாஸ் குறித்து தவறான தகவலையும் செய்தியாளர்களிடம் தெரிவித்து சென்றார்.
ராமதாஸ் அவர்களுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டது. 
 அவர் ஐசியூவுக்கு கொண்டு செல்லப்படவில்லை,ஆனால் ராமதாஸ்,  ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என செய்தியாளர்களிடம் பேட்டியை கொடுத்து ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியவர் அன்புமணி, எனவும் 
ராமதாஸ் சிகிச்சை குறித்து தவறான தகவலை பரப்பியவர் அன்புமணி.ஒரு மகன் என்ற கடமையிலிருந்து அன்புமணி தவறிவிட்டார். பெற்றெடுத்த தந்தையை,கட்சியை விட்டு துரத்தவேண்டும் என்று செயல்பட்டவர் 
தான் அன்புமணி.

நேற்று அன்புமணி ,தொலைத்து விடுவேன் என ஆவேசமாக கூறியுள்ளார். பாட்டாளி மக்கள்  கட்சியை தான் தொலைத்துவிட்டார் 
அன்புமணி என  சேலத்தில் பாமக மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் பேட்டி.