ட்ரெண்டிங்

செவ்வாய்பேட்டையில் 5,000 தேங்காய் கொண்டு அலங்காரம்!

சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா, கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகளுக்கு வித விதமான அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 

அந்த வகையில், சேலம் செவ்வாய்ப்பேட்டையில் 5,000 தேங்காய்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள அரங்கில், பிரம்மாண்டமான விநாயகர் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விநாயகரை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 

வித விதமான வடிவிலான விநாயகர் சிலைகள் பக்தர்கள் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, கணினியை ஆப்ரேட் செய்யும் விநாயகர் போன்ற சிலைகள் சிறுவர்களையும், இன்றைய இளைஞர்களையும் வெகுவாகக் கவர்ந்தது என்றே கூறலாம்.