வாக்குப்பதிவு இயந்திரகளை ஆய்வு செய்த ஆட்சியர் !
சேலம் மாவட்டத்தில் தேர்தலுக்காக பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு 5 (EVMs and VVPATS) (First Level Checking) பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (12.12.2025) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்று வருவதை இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள இணை தலைமை தேர்தல் அலுவலர் (புதுடெல்லி) பல்ராம் மீனா,மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்,பிருந்தாதேவி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதன்படி இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முதல் நிலை சரிபார்த்தல் பணிகள் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள இணை தலைமை தேர்தல் அலுவலர் (புதுடெல்லி) பல்ராம் மீனா இன்றையதினம் ஆய்வு மேற்கொண்டார்கள்.
மேற்படி பணிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் 11:122025 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெறுவதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகள் தினந்தோறும் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர்,ரவிக்குமார்,மாவட்ட ஆய்வுகுழு அலுவலர்,சுந்தரராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) (பொ) நடராஜன்,வட்டாட்சியர் (தேர்தல்) தாமோதரன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

-IVeECLSOrc.jpeg )
