ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் !!!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம். கோட்ட மேட்டுப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர்,ராஜேந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்,பிருந்தாதேவி, ஆகியோர் இன்று (11:102025) பார்வையாளராக கலந்து கொண்டனர்.

இக்கிராம சபைக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சிகள்,சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:

வெளிப்படையான கிராம நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது,சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் இன்றைய தினம் கிராம சபைக்கூட்டம்,நடத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

மேலும்,கோட்ட மேட்டுப்பட்டி ஊராட்சி கிராம மக்களின் 3 அத்தியாவசிய தேவைகளாக கண்டறியப்பட்டு இன்றைய தினம் ரூ.75.4 இலட்சம் மதிப்பிலான குடிநீர் இணைப்பு பணிகள் குறித்து விவாதித்து கிராம சபை ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான ஆணையினை ஊராட்சி செயலரிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஊராட்சியில் 380 நலிவடைந்த குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை கிடைத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதேபோன்று, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை. சாதிப் பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள் சாலைகள் மற்றும் தெருக்கள் பெயரை மாற்றுதல் குறித்து விவாதித்தல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதித்தல், கொசுக்கல் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சபாசார் செயலி செயல்பாடுகள் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் II. தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், தொழிலாளர் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறம் பயிற்சி திட்டம் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விபரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது.இந்த கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்களால் பல்வேறு இனங்கள் குறித்து கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது.இதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இக்கிராம சபை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்),உதவி,செயற்பொறியாளர்,வட்டாட்சியர்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும்  கிராமபொதுமக்கள் கலந்துகொண்டனர்.