ட்ரெண்டிங்

செப்.27-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற செப்.27- ஆம் தேதி அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்ட செப்டம்பர் 2024 மாதத்திய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற செப்.27- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண்:215- ல் நடைபெற உள்ளது.

 

விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.