ட்ரெண்டிங்

ஆத்தூரில் இலவச வீடு,மனைப்பட்டா மற்றும் உதவித்தொகை உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் !!!

 

ஆத்தூரில்,மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் உதவித்தொகையை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில்,மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சேலம் மாவட்ட சங்க செயலாளர் குணசேகரன் தலைமையில் கண்டன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ,இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பத்தின் ரேசன் கார்டுகளை அந்தயோதயா அன்னயோஜனா திட்டத்தில் மாதம் 35 கிலோ உணவு தானியம் வழங்கிடவும்,இலவச வீடு மற்றும் வீட்டு மனை பட்டா வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் 32 விண்ணப்பம் அளித்தும் வட்டாட்சியர் அவர்கள் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்க வலியுறுத்தியும்,வருவாய்த்துறை மூலம் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1500/- உதவித்தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகையை ஆந்திரா போல ரூ.6000, 10000,15000, ஆக உயர்த்தி வழங்கிட வலியுறுத்தி கண்டன கோஷங்கள் முழங்க பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.