சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முத்துமலை முருகன் கோயிலில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரம் அமைக்கும் பணி நடைபெற்றது. 25 அடி உயரம் கொண்ட தேக்கு மரத்தினால் ஆன கொடிமரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட தகரம் இணைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, முருகனுக்கு விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.
புத்தாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை காலத்தையொட்டி, கோயிலில் குடும்பங்களுடன் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


