ட்ரெண்டிங்

சேலம்,வாழப்பாடி அருகே பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து !!!

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வீர கவுண்டனூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த 11 பேர் பாக்கு காய் பறிக்கும் வேலைக்கு,பொலிரோ பிக்கப் (சரக்கு வாகனம்) வானத்தில் தும்பல் நோக்கி சென்றனர்.

அப்போது எடப்பட்டி புதூர் பகுதியில் அப்பகுதியை சார்ந்த நபர் ஒருவர் மாட்டை பிடித்துக் கொண்டு சாலையை கடந்துள்ளார்.மாட்டின் மீது பிக்கப் வாகனம் மோதாமல் இருக்க,ஓட்டுநர் வேகமாக வாகனத்தை திருப்பியதால் எதிர்பாராத விதமாக பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் நவீன் குமார் வயது 29, ராஜேந்திரன் வயது 50, கார்த்திகேயன் வயது 18, சிதம்பரம் வயது 27, மூர்த்தி வயது 56, மூர்த்தி வயது 48, செந்தில்குமார் வயது 46, சசிகுமார், மணி வயது 36, சசிதா, காயத்ரி, ஆகியோர் காயமடைந்தனர்.அருகே இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு,108 ஆம்புலன்ஸ் மூலமாக பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுப்பினார்.

ஏத்தாப்பூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்வராஜ் உதவி ஆய்வாளர்,வருவாய்த்துறை வட்டாட்சியர் ஜெயக்குமார் தலைமையிலான வருவாய் அலுவலர்கள் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை,விபத்துக்கான காரணத்தையும் விசாரணை செய்து வருகின்றனர்.