ட்ரெண்டிங்

அரசுப் பணிகளுக்கு லஞ்சம் பெற்றதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 6 பேர் மீது வழக்கு!

அரசுப் பணிகளுக்கு லஞ்சம் பெற்றதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 6 பேர் மீது வழக்கு!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே அரசுப் பணிகளுக்கு லஞ்சம் பெற்றதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட ஆறு பேர் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

 

காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 17 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில், பொம்மியம்பட்டி, தீவட்டிப்பட்டி, மூக்கனூர் ஆகிய மூன்று ஊராட்சிகளில் பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படவுள்ள பணிகளுக்கு கடந்த நவம்பர் 09- ஆம் தேதி ஒப்பந்தம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இதில், கலந்து கொள்ளும் ஒப்பந்ததாரர்களிடம் பணிகள் ஒதுக்கீடு செய்வதற்காக, ஒப்பந்த தொகையில் குறிப்பிட்டத் தொகை கமிஷன் என்ற வகையில், கையூட்டு கேட்டு பெறுவதாகப் புகார் எழுந்தது. இதன் பேரில், நிகழ்விடத்திற்கு வந்த மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத 6 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

 

அதைத் தொடர்ந்து, கடையாம்பட்டி விடிஓ வெங்கடேசன், துணை விடிஓ சண்முகம் ஆகியோர் அரசுப் பணிச் செய்வதற்காக, கையூட்டு பெறுவது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, விடிஓ வெங்கடேசன், துணை விடிஓ சண்முகம், ஒப்பந்ததாரர்கள் மதியழகன், தங்கராஜ், வெங்கடேசன், பெரியசாமி, மகேந்திரன் மற்றும் சந்தோஷ் குமார் உள்பட ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.