ட்ரெண்டிங்

ஆத்தூர் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு-குளிக்க தடை !!!

ஆத்தூர் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு-குளிக்க தடை !!!

 

ஆத்தூர் அருகே கல்வராயன்மலை தொடர்ச்சி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு, ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

படகு சவாரி மற்றும் பூங்காவிற்கு செல்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன்மலை பகுதியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது, இந்த பகுதியை வனத்துறையினர் சுற்றுலாத்தலமாக பராமரித்து வருகின்றனர்,ஆத்தூர் மட்டுமின்றி பெரம்பலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்,

இன்னிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக கல்வராயன்மலை தொடர்ச்சி பகுதியில் பெய்து வரும் கன மழையால் கல்வராயன்மலை நீரோடை, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால், ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் செந்திறத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதன் காரணமாக இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை, ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர், மேலும் அங்குள்ள ஏரியில் படகு சவ்வாரி செய்யவும் பூங்காவை சுற்றிப்பார்க்கவும் அனுமதி வழங்கியுள்ளனர்,