ட்ரெண்டிங்

விலைவாசி உயர்வைக் கண்டித்து சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

காய்கறிகள், மளிகைப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து, இன்று (ஜூலை 20) காலை 11.00 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அந்த வகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாஜலம், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் பாலசுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், சக்திவேல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில், பருப்பு வகைகள், காய்கறிகள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு அ.தி.மு.க.வினர் முழக்கமிட்டனர்.