உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை சுற்றுலாத்துறை அமைச்சர்,ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்,பிருந்தாதேவி,சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்,தாரமங்கலம் மற்றும் ஜலகண்டாபுரம் பேரூராட்சியில்,அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று (அக்.07) நடைபெற்றது.
சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது :-
முதலமைச்சரின்,உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் கடந்த ஜூலை மாதம் தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து,சேலம் மாவட்டத்தில்,அன்று முதல் வரும் நவம்பர் மாதம் வரை நகர்ப்புறப்பகுதிகளில் 158 முகாம்களும் மற்றும் ஊரகப் பகுதிகளில் 264 முகாம்களும் என மொத்தம் 432 சிறப்பு முகாம்கள் திட்டமிடப்பட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வுகள் காணப்பட்டு வருவதாகவும்,தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறைகளின் சேவைகள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலேயே சென்று வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் இந்த திட்டம் தொடங்கியது,முதல் 03.10.2025 வரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 112553 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன எனவும்,இதுதவிர கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரிக்கை விண்ணப்பமாக மொத்தம் 123,635 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, இன்று (07.10.2025) தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 14 வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு தாரமங்கலம் பொன்னுசாமி திருமண மண்டபத்திலும் ஜலகண்டாபுரம் பேரூராட்சி 7, 9, 10, 11 12 13 14, மற்றும் 15 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு சுப்ரமணிய கோவில் தெரு பகுதியில் உள்ள ஜலகண்டாபுரம் திருமண மண்டபத்திலும், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி எம்.பாலப்பட்டி பகுதிக்கு சுய உதவிக்குழு கட்டிட மண்டபத்திலும், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம், பச்சமலை பகுதிக்கு பெரியபக்களம் பச்சமலை அரசினர் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியிலும்,சங்ககிரி ஊராட்சி ஒன்றியம்,ஆலத்தூர். வீராச்சிப்பாளையம், மொத்தையனூர் பகுதிகளுக்கு வீராச்சிப்பாளையம் விவேகானந்தர் கல்லூரி வளாகத்திலும் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், காருவள்ளி, மூக்கனூர் பகுதிகளுக்கு காருவள்ளி, சின்னத்திருப்பதியில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மஹாலிலும், ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், எட்டிக்குட்டப்பட்டி சங்கீதப்பட்டி, நாரணம்பாளையம் பகுதிகளுக்கு கோட்டமேட்டுப்பட்டி ஜெயந்தி திருமண மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
அதேபோல் சேலம், ஜலகண்டாபுரம் பேரூராட்சி 7, 9,10,11 12 13 14 மற்றும் 15 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு ஜலகண்டாபுரதில், உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற,உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு முகாமில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள், இருக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
மேலும், இன்றைய தினம் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வழங்கிய மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் உட்பிரிவு பட்டா மாறுதல், பேரூராட்சி துறையின் மூலம் சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான உத்தரவு ஆணைகளும், மின்சார துறையின் மூலம் மின் இணைப்பு பெயர் மாற்றம் என மொத்தம் 11 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர்,ஜலகண்டாபுரம் பேரூராட்சி தலைவர்,மேட்டூர் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

-c6knkkgbeM.jpeg )

