ட்ரெண்டிங்

ஈரோடு- ஜோலார்பேட்டை ரயில் சேவைகள் ரத்து! 

ஈரோடு- ஜோலார்பேட்டை ரயில் சேவைகள் இருமார்க்கத்திலும் ஐந்து நாட்களுக்கு ரத்துச் செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. 

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு ரயில் நிலைய பகுதியில் ரயில் தண்டவாளங்களில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டை (ரயில் எண் 06412) செல்லும் ரயிலும், ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு (ரயில் எண் 06411) செல்லும் ரயிலும், நவம்பர் 25- ஆம் தேதி முதல் நவம்பர் 29- ஆம் தேதி வரை ரத்துச் செய்யப்படுகிறது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.