ட்ரெண்டிங்

எடப்பாடி பழனிசாமியுடன் பேசியது என்ன?- தமிமுன் அன்சாரி பேட்டி!

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறிய நிலையில், சேலம் மாவட்டம், நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நேரில் சந்தித்துப் பேசினார்.

 

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிமுன் அன்சாரி,20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க குரல் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளேன். அதேபோல், இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இஸ்லாமிய கைதிகளை விடுவிப்பது தொடர்பாக, அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறோம்.

 

பா.ஜ.க. கூட்டணியை அ.தி.மு.க. முறித்தது துணிச்சலான முடிவு என எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தேன். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து வரும் டிசம்பர் மாதம் முடிவுச் செய்யப்படும்.எனத் தெரிவித்துள்ளார்.