ட்ரெண்டிங்

விளையாட்டு போட்டியில் பதக்கங்களைக் குவித்த பள்ளி மாணவர்கள்!

 

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக சேலம் வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டியில் புனித பால் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆர்.ஆர். விஷால் என்ற மாணவர் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கோல் ஊன்றி தாண்டுதலில் முதலிடமும், உயரம் தாண்டுதலில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் இரண்டாம் இடமும் பெற்றார். ஜிம்னாஸ்டிக் போட்டியில் பிரபஞ்சன் என்ற மாணவர் பல பிரிவு போட்டிகளில் 6 தங்கப்பதக்கங்களை வென்றார். இவர்கள் இருவரும் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மிஸ்டர். சேலம் சேலம் ஆணழகன் போட்டியில் தௌபிக் என்ற மாணவர் 8ம் இடத்தையும், சப் ஜூனியர் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றார். மாநில அளவில் நடைபெற்ற பென்ஞ் பிரஸ் போட்டியில் ஸ்வந்த் குமார் இரண்டாம் இடம் பெற்றார். மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் விக்னேஷ் என்ற மாணவர் இரண்டாம் இடத்தை பிடித்தார். மாவட்ட அளவில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில் புனித பால் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தை பெற்றார்கள்.

 

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் அலெக்ஸ்பிரபு அடிகள், உதவி தலைமையாசிரியர் ஐசக், உடற்கல்வி இயக்குநர் தேவபிரபு, ஆசிரியர் சங்க செயலாளர் சைமன் சற்குணம், ஆசிரியர்கள் செல்வகுமார், ராபர்ட் ஆகியோரும் இருபால் ஆசிரியர்களும், மாணவர்களும் மேலும் பல வெற்றி பெற பாராட்டினார்கள்.