ட்ரெண்டிங்

அதிகளவில் ஆடுகள் விற்பனை; வியாபாரிகள் மகிழ்ச்சி!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ஆட்டுச்சந்தைகளில் ஆடுகள் அதிகளவில் விற்பனையானது.

 

ஓமலூர், காருவள்ளி ஆகிய வாராந்திர ஆட்டுச்சந்தைகளில் உள்ளூர் வளர்ப்பு ஆடுகள் விற்பனை அதிகமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து, வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பண்ணை ஆடுகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

 

ஐப்பசி மாத திருமணங்களைத் தொடர்ந்து, கிடா விருந்து வைக்க கிராம மக்கள் அதிகளவில் ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஒரேநாளில் சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.