ட்ரெண்டிங்

கோவையில் அண்ணாமலை போட்டி!

தமிழகத்தில் 9 மக்களவைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பா.ஜ.க. தலைமை. 

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதேபோல், வேலூர் மக்களவை தொகுதியில் பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.

தென் சென்னை தொகுதியில் முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனும், தூத்துக்குடியில் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி (தனி) மக்களவை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மத்திய சென்னை தொகுதியில் வினோஜ் பி செல்வமும், கிருஷ்ணகிரி தொகுதியில் நரசிம்மனும், கோவை தொகுதியில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர்.