சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள ஆணைவாரி சூழல் சுற்றுலா மையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் நோக்கில் வனத்துறை சார்பில் மின்சார சைக்கிள் (இ-சைக்கிள்) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இ-சைக்கிள் சேவை மூலம் சுற்றுலா பயணிகள், ஆணைவாரி மையத்தின் அழகிய இயற்கைச் சூழலை மாசு இல்லாமல் சுலபமாகவும், சுற்றி பார்க்கலாம்.
மொத்தம் 10 இ-சைக்கிள்கள் தற்போது பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன — இதில் ஆண்களுக்காக 6 சைக்கிள்களும், பெண்களுக்காக 4 சைக்கிள்களும் உள்ளன. ஒரு மணி நேர பயணத்திற்கான கட்டணம் ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையினர் தெரிவித்ததாவது:
சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஆணைவாரி மையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த இ-சைக்கிள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும்,பயணிகள் இந்த வசதியை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . வருங்காலங்களில் சைக்கிள்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,என தெரிவித்தனர்.
சுற்றுலா பயணிகள் இதனை உற்சாகமாக வரவேற்று, “மின்சார சைக்கிள் வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளதாகவும். குடும்பத்துடன் இயற்கையை ரசிக்க சோர்வில்லாமல் சுற்றிப் பார்ப்பதாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.
சேலம் வனத்துறை சார்பில் தொடங்கப்பட்ட இந்த புதிய முயற்சி, சுற்றுலா மேம்பாட்டிற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பெரும் பங்களிப்பு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-JCPFlPWc22.jpeg )
