நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வரும் நவம்பர் 15 முதல் சுங்கச்சாவடிகளில் பணம் மூலம் கட்டணம் செலுத்தும் வாகன ஓட்டிகளிடம், வழக்கமான தொகையை விட இருமடங்கு கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முடிவு செய்துள்ளது.
தற்போது, பெரும்பாலான வாகனங்கள் பாஸ்டேக் (FASTag) முறையில் கட்டணம் செலுத்தி வருகின்றன. ஆனால் இன்னும் சில வாகனங்கள் இந்த முறைமைக்கு வெளியே பணம் மூலம் கட்டணம் செலுத்தி வருகின்றன. இதனால் சுங்கச்சாவடிகளில் நெரிசல் மற்றும் தாமதம் ஏற்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த பிரச்சனையைத் தவிர்க்கவும், பாஸ்டேக் முறையில் இருந்து விடுபட்டவர்களை அதற்குள் சேர்க்கவும், வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை நடைமுறைக்கு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பணம் மூலம் கட்டணம் செலுத்தும் வாகனங்களுக்கு தனி பாதை இருக்காது என்பதால், பாஸ்டேக் இல்லாத வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், நாடு முழுவதும் டிஜிட்டல் கட்டண முறையை 100 சதவீதமாக்கும் நோக்கத்துடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.

-GOj1aKWzfX.jpg )

-SXgDfGgJfO.jpg)