ட்ரெண்டிங்

கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா 2024- வெளியான அறிவிப்பு! 

சேலத்தில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழா 2024- க்கான அறிவிப்பை அறங்காவலர் குழுத் தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். 

ஆடித்திருவிழா வரும் ஜூலை 23- ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது; ஜூலை 30- ஆம் தேதி கம்பம் நடுதலும், வரும் ஆகஸ்ட் 05- ஆம் தேதி சக்தி அழைப்பும் நடைபெறவுள்ளது. அதேபோல், ஆகஸ்ட் 11- ஆம் தேதி சத்தாபரணம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. 

ஆகஸ்ட் 12- ஆம் தேதி அம்மனுக்கு வசந்த் உற்சவமும், ஆகஸ்ட் 13- ஆம் தேதி அம்மனுக்கு பால் அபிஷேகமும் நடைபெறவுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியமான திருவிழா, ஆடித்திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருவிழா சுமார் ஒரு மாதம் நடைபெறும்; நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேகங்களும், அலங்காரங்களும் சிஐயப்பட்டு பூஜைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.