ட்ரெண்டிங்

வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!

 

நாடு முழுவதும் நடப்பு மாதத்தில் எரிவாயு சிலிண்டர் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை விலை நிலவரத்தைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்படுவதால், இந்த மாதத்திலும் புதிய விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, வீட்டு பயன்பாட்டுக்கான 14.2 கிலோ எல்.பி.ஜி சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய விலை நிர்ணயப்படி, 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ரூ.16.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சேலத்தில் வீட்டு சிலிண்டர் விலை ரூ.886.50 ஆகவும், வர்த்தக சிலிண்டர் ரூ.1,073.50 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வீட்டு சிலிண்டர் விலை குறைந்ததால் பொதுமக்களுக்கு சிறிதளவு நிம்மதி கிடைத்துள்ளதோடு, வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஹோட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள், தேநீர் கடைகள் உள்ளிட்ட வியாபாரிகள் கூடுதல் சுமையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வியாபாரிகள் தெரிவிக்கையில்,
ஏற்கனவே மூலப்பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வர்த்தக சிலிண்டர் விலை உயர்வால் ஹோட்டல் மற்றும் உணவுப் பொருட்களின் விலையிலும் தாக்கம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்களும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.