சேலம் அம்மாப்பேட்டை உணவு பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (அக.06) காணொலிக் காட்சியின் வாயிலாக ரூ.8.5 கோடி மதிப்பிலான அதிநவீன உயர் ரக உபகரணங்களை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த நவீன உபகரணங்கள் மூலம் உணவுப் பொருட்களில் உள்ள தரம், ரசாயன கலவை, மற்றும் கலப்படங்களை விரைவாகவும் துல்லியமாகவும் பரிசோதிக்க முடியும். இதனால் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தைக் கண்காணிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, சேலம் – அம்மாப்பேட்டை உணவு பகுப்பாய்வு ஆய்வக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர்,ராஜேந்திரன் பங்கேற்று, புதிய உபகரணங்கள் பொருத்தப்பட்ட ஆய்வகத்தை நேரில் பார்வையிட்டார்.
அம்மாப்பேட்டை ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன உபகரணங்கள் உணவு பாதுகாப்புத் துறையின் பரிசோதனை செயல்பாடுகளில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.
மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உணவுப் பொருட்களின் தரம் மிக முக்கியம். இதனை உறுதிப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் நவீன உபகரணங்களுடன் கூடிய ஆய்வகங்கள் உருவாக்கப்படுகின்றன.
நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.பிருந்தாதேவி., மாநிலங்களவை உறுப்பினர்,சேலம் நாடாளுமன்ற உறுப்பினர்,மாநகராட்சி மேயர்,உணவு பகுப்பாய்வாளர், உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள்,பங்கே
ற்றனர்.



