எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருவில் உள்ள குழந்தை பாலினம் குறித்து ஸ்கேன் பார்த்து வந்த மருத்துவர் உட்பட மூன்று பேரை கைது.
மருத்துவமனைக்கு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ள இச்சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட அம்மன் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அரவிந்த் என்ற தனியார் மருத்துவமனையில் மருத்துவர் கண்ணன் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து ஆணா பெண்ணா என சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது....
இந்த நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குழுவாக கர்ப்பிணிப் பெண் ஒருவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்வது போல் மருத்துவமனையில் அனுமதித்தனர்....
அப்போது அங்கு மறைந்திருந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீரென மருத்துவமனைக்குள் நுழைந்த போது மருத்துவமனையில் பாலினம் பார்க்கப்படும் ஸ்கேன் மிஷினை மருத்துவரின் மனைவி ஜோதி மருத்துவமனை விட்டு வெளியே கொண்டு செல்ல முயன்றபோது திடீரென தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்து கண்டுபிடிக்கப்பட்டது....
பின்னர் மருத்துவமனையில் உள்ள அனைத்து அறைகளிலும் ஸ்கேன் செய்வது குறித்து மாவட்ட சுகாதார த்துறை துணை இயக்குனர் சவுண்டம்மாள், மற்றும் நந்தினி, யோகானந்தம், ஆகியோர் அதிரடியாக சோதனை செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்....
அப்போது ஸ்கேன் பார்ப்பதற்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டதாகவும் சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வந்ததும் 80க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் பயன்படுத்தி வந்ததாகவும் தெரிய வந்ததை அடுத்து உடனடியாக மருத்துவர் கண்ணன் உடந்தையாக இருந்த அவரது மனைவி ஜோதி, மேகநாதன், ஆகிய மூவர் மீது எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் ஸ்கேன் எடுப்பதற்கு பயன்படுத்திய மிஷின் ஆகியவைகளை பறிமுதல் செய்து மருத்துவமனைக்கு மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ள இச்சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...



