ட்ரெண்டிங்

கோவை- தன்பாத் இடையேயான ரயில் சேவை நீட்டிப்பு! 

கோடைக்கால விடுமுறையையொட்டி, கோவை- தன்பாத் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு, கோவை- தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் சேவை வரும் ஜூன் 28- ஆம் தேதி வரையும், தன்பாத்- கோவை வாராந்திர சிறப்பு ரயில் சேவை வரும் ஜூலை 01- ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். 

மேலும், இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.