சேலம் வழியாக இயக்கப்படும் ஹுப்ளி- ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை வரும் டிசம்பர் 28- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் வழியாக இயக்கப்படும் ஹுப்ளி- ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை இருமார்க்கத்திலும் வரும் டிசம்பர் 28- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, இந்த சிறப்பு ரயில் பாம்பன் ரயில் பாலம் வழியாக இயக்கப்படாது; ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்தில் இயக்கப்படாது; ஹுப்ளியில் இருந்து ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
இந்த சிறப்பு ரயில் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். குறிப்பாக, சேலம் ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


