சேலம் மாவட்டம் பேளூரைச் சேர்ந்த எச்.ஒ.என்.சி நிறுவனத்தின் நிறுவனர் விஞ்ஞானி ராமலிங்கம் கார்த்திக் அவர்கள், உலகளவில் பெரும் கவனத்தை ஈர்க்கும் வகையில் தண்ணீரில் எரியும் அடுப்பை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.
இந்த வகையான அடுப்பு, தண்ணீரில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகக் கொண்டு இயங்குகிறது. இதன் மூலம் பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி போன்ற வழக்கமான எரிபொருட்களுக்கு மாற்றாக தண்ணீரையே எரிபொருளாக பயன்படுத்தும் புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளார்.
விஞ்ஞானி கார்த்திக் கண்டுபிடித்த இந்த புதிய தொழில்நுட்பம், சுற்றுச்சூழலுக்கு, பாதிப்பில்லாததாகவும்,காற்றுமாசை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது என தெரிவித்தார்.
மக்கள் பயன்பாட்டிற்கு குறைந்த செலவில் எரிபொருள் மாற்றாக அமையக்கூடியது என்பதால்,
அடுத்தடுத்த காலங்களில் உலகளாவிய அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-(8)-oQEWL3i63Z.jpg )
-SXgDfGgJfO.jpg)