ஆத்தூர் பகுதியில் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் சாகுபடி செய்யப்பட்ட சாமந்தி பூக்களை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, வரத்து அதிகரித்தும் ஒரு கிலோ 300 ரூபாய் வரை விலையேற்றம் அடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கருமந்துறை சிறுவாச்சூர், தலைவாசல், தம்மம்பட்டி கெங்கவல்லி, உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கர்களில் விவசாயிகள் சாமந்தி பூக்களை சாகுபடி செய்துள்ளனர், இங்கு அறுவடை செய்யப்படும் பூக்கள் ஆத்தூர் மடும்மின்றி சேலம் பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு செல்வது வழக்கம், தற்போது ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாமந்தி பூக்கள் நல்ல விளைச்சல் கண்டுள்ளது, இதனிடையே நாளை மறு நாள் ஆயுதபூஜை பண்டிகை என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் சாமந்தி பூக்களை அறுவடை செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர், இங்கு அறுவடை செய்யும் சாமந்தி பூக்களை விற்பனைக்காக சந்தைக்கு எடுத்து செல்லும் போது வியாபாரிகள் நிர்ணயம் செய்யும் விலைக்கே விற்பனை செய்து வருவதாகவும் கடந்த சில நாட்களாக பூக்களுக்கு உரிய விலை கிடைக்காமல் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆயுத பூஜை பண்டிகையொட்டி சாமந்தி பூக்கள் வரத்து அதிகரித்தும் ஒரு கிலோ தரத்திற்கேற்ப 300 ரூபாய் வரை விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,


-SXgDfGgJfO.jpg)