ட்ரெண்டிங்

துரைமுருகனுடன் எனது நட்பு தொடரும்- நடிகர் ரஜினிகாந்த்! 

அமைச்சர் துரைமுருகனுடன் எனது நட்பு தொடரும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

அண்மையில் நடந்த கலைஞர் குறித்த புத்தகம் வெளியிட்டு விழாவில் பழைய மாணவர்கள் வெளியேற மறுக்கிறார்கள் என மூத்த அமைச்சர்கள் குறித்து ரஜினிகாந்த் பேசியிருந்தார். மூத்த மாணவர்களை சமாளிப்பது கடினம் என்றும் அவர் பேசியிருந்தார். 

பல்போன நடிகர்கள் என அமைச்சர் துரைமுருகன் என நடிகர் ரஜினிகாந்துக்கு தனது பாணியில் பதிலடிக் கொடுத்துள்ளார். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர் துரைமுருகன் எனது நீண்ட கால நண்பர்; அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்; துரைமுருகனுடனான எனது நட்பு தொடரும்; அவர் என்ன சொன்னாலும் எனக்கு பிடிக்கும். 

கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய விஜய்க்கு எனது வாழ்த்துகள் எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.