ட்ரெண்டிங்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி !!!

 

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று உலக சுற்றுலா தினத்தையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

 

சேலம் ஏற்காடு வனத்துறை சோதனைச்சாவடியில் ஏற்காட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பைகளை வழங்கினார். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது

 

தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுலாத்தளங்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும். அந்தவகையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும். 

 

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் சர்வதேச அடிப்படையிலான பல்வேறு வசதிகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத்தளங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 2,421 கோடி சுற்றுணப்பயணிகள் வருகை தந்துள்ளார்கள் எனவும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். மேலும் சுற்றுலாத்துறையிலும் முதலீட்டாளர்களை ஈர்க்கின்ற வகையில் முதலமைச்சர் தலைமையில் சுற்றுலாத்துறையின் மாநாடு சென்னையில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

மேலும் உலக சுற்றுலா தினம் செப்.27 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள்.சுற்றுலாவும் நிலையான மாற்றமும்.இந்தக் கருப்பொருளின் முக்கிய நோக்கம் சுற்றுலாவை ஒரு நேர்மறையான மாற்றத்திற்கான காரணியாக மாற்றுவதாகும்.

 

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளின் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக சுற்றுலா தினத்தையொட்டி, இன்றையதினம் பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற பேரணி மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. 

 

மேலும், சுற்றுலாதினத்தையொட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

 

(இதனைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வினை வளர்ந்து வரும் இளம் சமுதாயத்தினர் உணர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் சேலம் ஏற்காடு வனத்துறை சோதனைச்சாவடியில் ஏற்காட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளுக்கு வனத்துறையின் சார்பில் மரக்கன்றுகளும்,தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மஞ்சப்பைகளும் வழங்கப்பட்டது.

 

அதேபோன்று, பொதுமக்களும் தங்கள் வீடுகளைச் சுற்றியுள்ள காலியிடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து தமிழ்நாட்டை பசுமை மாநிலமாக மாற்றிட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.என சுற்றுலாத்துறை அமைச்சர்,தெரிவித்தார்.

 

சேலம் ஏற்காடு அடிவாரம் வனத்துறை சோதனைச்சாவடி பகுதியில் பசுமை நிலப்பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு வனத்துறை சார்பில் விதைப்பந்துகளை சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. இரா அவர்கள் தூவினார்கள் பின்னர், தனியார் பங்களிப்புடன் சேலம் ஏற்காடு பிரதான சாலைப்பகுதிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுவதை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்,ராஜேந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

 

இந்நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டிஎம்.செல்வகணபதி சேலம் மாநகராட்சி மேயர் திரு.ஆ.இராமச்சந்திரன். மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.