ட்ரெண்டிங்

பங்குச்சந்தையில் ஊழல்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு! 

பங்குச்சந்தையில் ஊழல் நடந்துள்ளதாக ராகுல்காந்தி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி., பங்குச்சந்தையில் லாபம் ஈட்ட கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கும், வெளிநாட்டு முதலீட்டுக்கும் தொடர்பு உள்ளது. ஜூன் 04- ஆம் தேதிக்குள் பங்குகளை வாங்கும்படி மே 13- ஆம் தேதி அமித்ஷா கூறுகிறார். 

பங்குச்சந்தையில் சுமார் ரூபாய் 38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கருத்துக் கணிப்புக்கு பிறகு தான் இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன, முடிவுக்கு பிறகு சரிந்தன. பிரதமர் நரேந்திர மோடியும் பங்குச்சந்தை குறித்து பேசியுள்ளார். சிலர் பணம் சம்பாதிக்க பிரதமரும், உள்துறை அமைச்சரும் உதவியுள்ளனர். இது குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.