சேலம் ரயில் நிலையத்தில் ஒடிசா ஆந்திரா தமிழ்நாடு கேரளா ரயில்களில் கஞ்சா கடத்துவதை தடுக்க ரயில்வே போலீசார் திடீர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே தனிப்படை போலீசார்,தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் பொம்முடி ரயில் நிலையத்தில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை விட்டு வந்தனர் அப்போது முன்பதிவுல்லா புது பெட்டியில் கேட்பாரற்று இருந்த பையை சோதனை செய்தனர் அதில் பிளாஸ்டிக் அவர்களால் சுத்தப்பட்ட பார்சல் களை பிடித்து பார்த்தபோது அதில் 17 கிலோ கஞ்சா இருந்தது அதனை கடத்தி வந்த நபர்கள் போலீசார் சோதனை செய்வதை பார்த்து அந்த பையை போன்ற சென்றுள்ளனர்.
அப்போது அந்த ரயில் பெட்டியில் அந்த கஞ்சாவை கடத்தி வந்த நபர்கள் இருக்கிறார்களா என விசாரணை செய்தனர்,ஆனால் அவர்களை அடையாளம் காண முடியாததால் சேலம் ரயில் நிலையம் வந்தவுடன் 17 கிலோ கஞ்சாவை சேலம் ரயில்வே போலீசில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர்.
சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசில் கஞ்சாவை ஒப்படைத்த சேலம் ரயில்வே போலீசார்,மர்ம நபர்கள் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெறுவதாக தெரிவித்தனர்.

-Iiv0NF5Zzu.jpg )
