ட்ரெண்டிங்

ஆத்தூரில் மின் கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பற்றி எரிந்து பொருட்கள்,பணம் சேதம் !!

 

மின் கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் முற்றிலும் எரிந்து சேதம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பைத்தூர் ஊராட்சி ஏழாவது வார்டு நைனார்பாளையம் பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வருபவர் விஜயகுமார், கூலித் தொழிலாளியான இவருக்கு பிரேமா என்கிற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர், இன்னிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது திடிரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதைப் பார்த்த அக்கம், பக்கத்தினர், மலமலவென எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர், இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த 22 ஆயிரம் ரொக்கம் பணம், குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தன, இந்த தீவிபத்து குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,