ட்ரெண்டிங்

விண்வெளியில் இந்தியா புதிய சகாப்தம்- பிரதமர் நரேந்திர மோடி பேட்டி! 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) காலை 11.00 மணிக்கு தொடங்கிய நிலையில் டெல்லி நாடாளுமன்ற வளாகம் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, மழைக்காலம் என்பது புதிய தொடக்கங்களுக்கான காலம். கடந்த 10 ஆண்டு சராசரியை விட இந்த ஆண்டு மிக அதிகமாக மழைப்பொழிவு உள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவின் வெற்றி மற்றும் கௌரவத்தைக் கொண்டாட இதுவே சரியான தருணம். விண்வெளியில் இந்தியா புதிய சகாப்தத்தை படைத்துள்ளது. 

பாகிஸ்தானின் பயங்கரவாத உட்கட்டமைப்புகளை அழித்து புதைத்தது இந்தியா. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியாவின் ராணுவ பலத்தை உலகமே அறிந்தது. மழைக்கால கூட்டத்தொடரில் சுமுகமாக விவாதங்களை நடத்த வேண்டும். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்திய தேசியக் கொடி பறந்தது என கோரிக்கை விடுத்துள்ளார்.