சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காதொலிக் கருவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி முன்னிலையில் இன்று (மே 10) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவத்துறைக்கென பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 8,000 மதிப்பிலான காதொலிக் கருவிகள் 100 பயனாளிகளுக்கு ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது.
காது கேளாமை என்பது பச்சிளம் குழந்தை முதல் சிறியவர்கள் பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் வரை ஏற்பட வாய்ப்புள்ளது. காது கேளாமை நரம்பு சம்பந்தமாகவோ, விபத்தின் மூலமாகவோ, வயது மூப்பினாலோ, நடு காதில் ஏற்படும் கிருமி தொற்றின் மூலமாகவோ, மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட வாய்ப்புள்ளது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை துறையின் கீழ் இயங்கும் கேபியில் பிரிவில் நவீன கருவிகளை கொண்டு பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை செவித்திறன் பரிசோதனை செய்யப்படுகிறது.
செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு ரூபாய் 25,000 முதல் ரூபாய் 50,000 வரை மதிப்புள்ள காதுகேள் கருவி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் காதொலிக்கருவிகள் கடந்த 3 ஆண்டுகளில் 3,000 பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். தேசிய காது கேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தின் முக்கிய நோக்கமாவது பச்சிளம் குழந்தைகளுக்கு நவீன கருவிகள் கொண்டு செவித்திறன் பரிசோதனை செய்யப்படுகிறது. பிறவி காது கேளாமை கண்டறியப்பட்டால் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காக்களியர் (cochlear implant) இம்பிளான்டேஷன் அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது.
அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் காது கேளாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படுகிறது.
மேலும், கடந்த 4 ஆண்டுகளில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சைக்கான PET Scan மையம், இருதய சிகிச்சை பிரிவிற்கு ரூபாய் 6.15 கோடி மதிப்பீட்டில் கேத்லாப் கருவிகள் வழங்கப்பட்டள்ளது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உணர்திறன் ஒருங்கிணைப்புப் பூங்கா, சித்த மருத்துவப் பிரிவு கட்டடம், கட்டணப்படுக்கை உள்ளிட்ட கட்டடங்கள் ரூபாய் 1.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன.
தற்போது வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பொதுமக்களுக்கான மருத்துவ சேவைகள் அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே கிடைக்கும் வகையில் வட்டார மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சேலம் அம்மாப்பேட்டையில் ரூபாய் 43.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையினை துவக்கி வைத்தார்கள். இம்மருத்துவமனையில் கடந்த 4 மாதங்களில் 6,500 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
மேலும், 145 இரத்த சுத்திகரிப்பு, 9 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் முழுமையாக கிடைத்திடும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



-SXgDfGgJfO.jpg)