முதிர்வு காலம் முடிவடைந்து 3 ஆண்டுகளுக்கு பின்னரும் மூடப்படாத சிறுசேமிப்பு கணக்குகளை முடக்கவிருப்பதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
அஞ்சல் அலுவலகத்தில் சந்தாதாரர்களால் ஆண்டுக்கு இரண்டு முறை உரிய முறையில் நீட்டிப்பு செய்யாத முதிர்வடைந்த செயலற்ற சிறுசேமிப்பு கணக்குகளை முடக்கப்படும் என்று இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 என இரண்டு கட்டங்களாக கணக்குகள் அடையாளம் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதிர்வடைந்ததும் மூடப்படாத கணக்குகள் அடுத்த 15 நாட்களுக்குள் முடக்கப்படும்; சிறுசேமிப்பு கணக்குகளான பொது சேமநல நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ் அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம், அஞ்சலக டெபாசிட், தொடர் வைப்புத் திட்டம் ஆகியவற்றிற்கு புதிய விதிகள் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


