ட்ரெண்டிங்

ஏமாற்றம் அளிக்கிறது: நடிகர் சரத்குமார்! 

வாய்ப்பு இருப்பின் நடராஜனைத் தேர்வுச் செய்ய தேர்வுக் குழுவினர் மறுபரிசீலனை செய்யலாம் என்று நடிகர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரமுகரும், நடிகருமான சரத்குமார் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில், சிறந்த வேகப்பந்து வீச்சாளரும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடராஜன் அவர்களின் பெயர் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. வாய்ப்பு இருப்பின் அவரை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் மறுபரிசீலனை செய்யலாம் என்று வலியுறுத்தியுள்ளார்.