ட்ரெண்டிங்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நாளில் 6 பெண்களுக்கு சுகப்பிரசவம்- விரிவான தகவல்!

சேலம் மாநகராட்சியின் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட செவ்வாய்பேட்டையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 14- ஆம் தேதி அன்று ஒரே நாளில் ஆறு கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகியுள்ளது. 

இதையடுத்து, அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்ற சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப., மருத்துவக் குழுவினரை வெகுவாகப் பாராட்டினார். அத்துடன், பிரசவித்த தாய்மார்களுக்கு குழந்தை நலப்பரிசு பெட்டகம் வழங்கினார். 

இந்த நிகழ்வின் போது, மாநகர நல அலுவலர் யோகானந் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.