போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீ காந்த்தை வரும் ஜூலை 07- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, நடிகர் ஸ்ரீ காந்த் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஸ்ரீ காந்த் குறித்த முழு தொகுப்பை விரிவாகப் பார்க்கலாம்!
கடந்த 1979- ஆம் ஆண்டு பிப்ரவரி 28- ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் ஸ்ரீராம் என்கிற ஸ்ரீ காந்த். 2000-களில் பிரபல இயக்குநர்கள் மிஸ்கின், வெற்றிமாறன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியைத் தொடங்கி சினிமாவிற்கு நுழைந்த ஸ்ரீ காந்த், கடந்த 2002- ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜாக் கூட்டம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
ரோஜாக் கூட்டம் திரைப்படத்தைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, கனா கண்டேன், மனசெல்லாம், பம்பரா கண்ணாலே போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம் படங்களிலும் ஹீரோவாக நடித்தார்.
சினேகா, த்ரிஷா, மீரா ஜாஸ்மின் போன்ற முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்த அவர், 2008- ஆம் ஆண்டு வெளியான பூ படத்தில் தனது அழுத்தமான கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தவர். கடந்த 2012- ஆம் ஆண்டு நடிகர் விஜய், ஜீவா ஆகியோருடன் இணைந்து நடித்து Come Back கொடுத்தார். அதன் பிறகு ஸ்ரீ காந்த் நடித்து வெளியான படங்கள் பெரிதாக கைக் கொடுக்கவில்லை. இவர் கடைசியாக நடித்த திரைப்படம் தினசரி.
இதனிடையே, வந்தனா என்ற பெண்ணுடன் 3 மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு ஏற்க மறுத்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், கடந்த 2008- ஆம் ஆண்டு அவரையே மணந்தார். இந்த சூழலில், நடிகர் ஸ்ரீ காந்திற்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில், ஜூன் 23- ஆம் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்ட நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் சில நடிகர்கள் சிக்குவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழ் திரையுலகத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஸ்ரீ காந்த் பரபரப்பு வாக்குமூலம்!
காவல்துறை விசாரணையில் ஸ்ரீ காந்த் அளித்த வாக்குமூலம் இதோ:-, எனக்கு பிரசாத் மட்டுமே தெரியும். அவர் என்னை வைத்து படம் தயாரித்துள்ளார். அதில் எனக்கு ரூபாய் 10 லட்சம் தர வேண்டும். அதனை கேட்கும் போது கொக்கைன் போதைப்பொருள் கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்தினார். பணம் கேட்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் அவர் கொக்கைன் கொடுத்தது, எனக்கு பழக்கத்தை அதிகப்படுத்தியது; 3 முறை பயன்படுத்திய பின்பு நானே கேட்கும் அளவுக்கு அடிமையானேன் என குறிப்பிட்டுள்ளார்.


-SXgDfGgJfO.jpg)