ட்ரெண்டிங்

உரிமத்தைப் புதுப்பிக்கப்படாத வாகனங்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள்!

சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியை அடுத்த தலைவாசலில் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி தலைமையிலான வாகன ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது, அந்த சாலை வழியாக நடந்த தனியார் பேருந்துகள், லாரிகள், வேன்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வாகன உரிமங்களை ஆய்வுச் செய்தனர். அப்போது, வாகன உரிமத்தைப் புதுப்பிக்காத லாரிகள், கண்டெய்னர் லாரிகள், வேன்கள் உள்ளிட்ட 17  வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அத்துடன், பறிமுதல் செய்யப்பட்ட 17 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தொடர்ந்து வாகன தணிக்கை நடைபெறும் என்றும், வாகன உரிமத்தை சட்டப்படி புதுப்பித்து, வாகனத்தை இயக்க வேண்டும் என்று வாகன உரிமையாளர்களை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.