விளையாட்டு

தொடர்ந்து வெற்றியை நோக்கி சேலம் ஸ்பார்டன்ஸ் அணி!

 

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் மைதானத்தில் நேற்று (ஜூன் 13) இரவு 07.15 மணிக்கு நடந்த டி.என்.பி.எல் போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை எஸ்கேஎம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி எதிர்க்கொண்டது. 

முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய எஸ்கேஎம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்று அசத்தியது. இது சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு மூன்று போட்டிகளில் மூன்றாவது வெற்றியாகும்

திருப்பூர் அணி தரப்பில் அதிகபட்சமாக துஷார் ரகேஜா 74 ரன்களையும், அமித் சாத்விக் மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் தலா 25 ரன்களை எடுத்தனர். அதேபோல், சேலம் அணி தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ராஜகோபால் 69 ரன்களையும், கவின் 32 ரன்களையும், ஹரிஷ் குமார் 23 ரன்களையும் எடுத்தனர். 

திருப்பூர் அணி தரப்பில் எம்.பொய்யாமொழி 3 விக்கெட்டுகளை, ஹரிஷ் குமார், ஹரி நிஷாந்த் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும், எம்.முகம்மது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதேபோல் சேலம் அணி தரப்பில், சின்னப்பம்பட்டி நடராஜன், சிலம்பரசன் தலா 2 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர், முகமது அலி தலா 1 விக்கெட்டையும் எடுத்து அசத்தினர். 

இன்றைய டி.என்.பி.எல். போட்டிகள்! 

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் மைதானத்தில் இன்று (ஜூன் 14) பிற்பகல் 03.15 மணிக்கு நடைபெறும் டி.என்.பி.எல். போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகளும், இரவு 07.15 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்- மதுரை பந்தர்ஸ் அணிகளும் மோதுகின்றன.