சேலம் 5 ரோட்டில் உள்ள ஸ்ரீ ரத்னவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் அதிநிலா மற்றும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி இணைந்து நடத்தும் மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி- 2025 இன்று (மே 02) தொடங்கியுள்ளது.
வீட்டிற்கு தேவையான மின்சாதன பொருட்கள், ஆபரணங்கள், சோலார், உடற்பயிற்சி உபகரணங்கள், ஜவுளிகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள், உணவுகள் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
200- க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றுள்ள இந்த வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி மே 02, 03, 04 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. காலை 09.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம். அனுமதி முற்றிலும் இலவசம். 80- க்கும் மேற்பட்ட பிராண்ட்டுகள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக ஆஃபர்களையும் முன்னணி நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.


-SXgDfGgJfO.jpg)