ட்ரெண்டிங்

சத்தீஸ்கரில் நிலக்கரி, இருப்பாலையில் சேலம் எம்.பி. ஆய்வு!

 

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அமைந்துள்ள உலகின் 2- வது மிகப்பெரிய தென்கிழக்கு நிலக்கரி கம்பெனியினுடைய கெவ்ரா நிலக்கரி சுரங்கத்தை தி.மு.க.வின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும், சேலம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி, நாடாளுமன்ற நிலைக்குழுவினருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், தொழிலாளர் நலன், தொழிற்சாலையின் செயல்பாடுகள், தொழிலாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். 

 

அதைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாய் இரும்பாலையையும் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் இன்று (ஜன.23) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, இருப்பாலையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆலையின் உயரதிகாரிகள் கலந்து கொண்டு நாடாளுமன்ற நிலைக்குழுவினருக்கு விளக்கம் அளித்தனர். 

 

இது தொடர்பாக புகைப்படங்களை சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.