சேலம் நெத்திமேடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.
இதன் காரணமாக நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், 4 ரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவாரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தார்.
பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் வழக்கமான நிலையில் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


