விளையாட்டு

கங்குலி பிறந்தநாளை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு

பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளார். ஜூலை 8 ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அறிவிப்பொன்றை வெளியிட உள்ளதாக கங்குலி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 'Leading With' என எழுதும் புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 'நீங்கள் கேட்டீர்கள் - இதோ!' என இந்த பதிவில் அவர் கூறியுள்ளார். அவர் என்ன அறிவிக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பும் கேள்விகளும் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை தூண்டியுள்ளது.