சேலத்தில் மாவட்ட அளவிலான கோ - கோ போட்டிகள்!
சேலத்தில் நடைபெற்ற கோ கோ போட்டிகளில் வீரர்கள் தங்கள் முழு திறனை வெளிப்படுத்தி அசத்தினர்.
பள்ளிகளுக்கு இடையிலான குறுவட்ட அளவிலான கோ கோ சேலம் மாவட்டம், பண்ணப்பட்டி அரசுப் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. அரையிறுதிப் போட்டிகளில், பண்ணப்பட்டி அரசுப் பள்ளியும், பெரிய வடகம்பட்டி பள்ளியும் வெற்றி கண்டன.
இதில் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிப் பெறவுள்ளது. குறிப்பாக, கோ கோ போட்டியில் முழுத் திறனை வெளிப்படுத்தி மாணவர்கள் அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


