சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இன்று (ஜூன் 12) நடைபெற்ற அரசு விழாவில் ரூபாய் 204.64 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,01,203 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து ரூபாய் 1,649.18 கோடி மதிப்பிலான 225 முடிவுற்ற பணிகளை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 509 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.
அப்போது, சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் ரூபாய் 9 கோடியில் செவ்வாய்பேட்டையில் இருக்கும் தினசரி சந்தை மேம்படுத்தப்படும், ரூ.10 கோடியில் இலுப்பநத்தம் கிராமத்தில் இருக்கும் வேளாண் விற்பனை நிலையம் தரம் உயர்த்தப்படும், மேட்டூர், நரசிங்கபுரத்தில் புதிய நகராட்சி அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும், சங்ககிரி நகராட்சியில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும், தாரமங்கலம், இடைப்பாடி, ஆத்தூரிலும் புதிய குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.
700- க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களையும் வழங்கினார்.



-hcTFAGMRGb.jpg)